இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
வெள்ளலூர் அருகே இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வெள்ளலூர் அருகே இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மர்மநபர்
கோவை வெள்ளலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் மூலம் யாரோ தான் குளிப்பதை மறைந்து இருந்து வீடியோ எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டார். இதனைக்கேட்ட அந்த மர்ம நபர் அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அந்த இளம்பெண், மர்ம நபர் வீடியோ எடுத்தது குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து அந்த இளம்பெண் தனது பெற்றோருடன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.
வாலிபர் கைது
இந்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண் குளிப்பதை மறைந்து இருந்து வீடியோ எடுத்தது அதே பகுதியில் அறை எடுத்து வசித்து வரும் சேலம் மாவட்டத்தை விக்னேஷ்குமார் (வயது 27) என்பதும், இவர் கோவையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் பதுங்கியிருந்த விக்னேஷ்குமாலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் செல்போனில் இருந்த இளம்பெண்ணின் வீடியோ பதிவை அழித்தனர்.
விக்னேஷ்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.