பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது


பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
x

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கண்ணமுத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத் என்கிற சங்கரலிங்கம் (வயது 34). கூலிதொழிலாளி. இவர் சம்பவத்தன்று மனவளர்ச்சி குன்றிய 30 வயதுடைய பெண்ணின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது சங்கரலிங்கம் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதைப் பார்த்த அந்த பெண்ணின் பெற்றோர் அவரை பிடிக்க முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் பலாத்கார முயற்சி உள்பட பல்வேறு வழக்கு பிரிவில் சங்கரலிங்கத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் மற்றும் போலீசார் தலைமறைவாக இருந்த சங்கரலிங்கத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story