இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
செஞ்சி அருகே இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
செஞ்சி
செஞ்சி தாலுகாவுக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணின் பெற்றோர் சென்னையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர் தனது பாட்டியின் பாதுகாப்பில் ஊரிலேயே இருந்து வந்தாா்.
சம்பவத்தன்று வீ்ட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜசேகர்(வயது 31) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது தற்காப்புக்காக அந்த இளம்பெண் பாத்திரத்தை எடுத்து ராஜசேகர் மீது விசினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தலையணையை எடுத்து இளம்பெண்ணின் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அந்த இளம் பெண் கூச்சலிட்டார். இ்ந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர் இது குறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.