கரம்பை மண் கடத்த முயன்ற வாலிபர் கைது
பாளையங்கோட்டை அருகே கரம்பை மண் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை அருகே கீழப்பாட்டம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (வயது 29) மற்றும் சிலர் சேர்ந்து, திருத்து பகுதியில் பொக்லைன் எந்திரம் மற்றும் லாரி மூலமாக கரம்பை மண்ணை சட்டவிரோதமாக அள்ளி கடத்த முயற்சி செய்தது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி விசாரணை நடத்தி, கரம்பை மண் கடத்த முயன்ற சுடலைமணியை கைது செய்தார். மேலும் பொக்லைன் எந்திரம், லாரியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story