மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வாலிபர் கைது


மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வாலிபர் கைது
x

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் எரும்பி கிராமத்தில் சித்தூர் சாலையில் வசித்து வந்தவர் வீரபத்திரன். இவர் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி வேண்டாஅமிர்தம்மாள் (வயது 85). இவர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி மதியம் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இது குறித்து அவரது மகன் சங்கர் (53) ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கனகம்மா சத்திரம் அருகே காஞ்சிபாடி கிராமத்தைச் சேர்ந்த டில்லி (25) என்ற வாலிபரை போலீசார் விசாரணை செய்ததில் மூதாட்டி வேண்டா அமிர்தம்மாளிடம் தங்க சங்கிலியை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து மூதாட்டியிடம் பறித்த நகையை போலீசார் மீட்டனர்.

1 More update

Next Story