பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது


பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது
x

அம்மாப்பேட்டை அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை:

திருச்சி கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் நரேஷ்(வயது 24) இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை, மெலட்டூர் போலீஸ் சரகங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் தனிப்படை போலீசார் நரேசை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருச்சிக்கு சென்ற தனிப்படை போலீசாா் அங்கு பதுங்கி இருந்த நரேசை கைது செய்து அவரிடமிருந்து தங்க சங்கிலி, மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர, நரேஷை, அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். நரேஷ் மீது திருச்சி மாநகரத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story