குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேசுவதாக தொடர்பு கொண்டு பணம் மோசடி செய்து வந்த, சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பவரை வேலூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் இருக்கும் அவரிடம் போலீசார் வழங்கினர்.


Next Story