குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

தஞ்சை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாக்குறிச்சி நெய்குணம் சாலை சாரதி நகரை சேர்ந்தவர் கண்ணையன் மகன் தமிழ் என்ற தமிழரசன் (வயது 37). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து தமிழரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், குண்டர் சட்டத்தில் தமிழரசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.


Next Story