குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

அருமனை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அருமனை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அருமனை அருகே உள்ள சிதறால் புன்னமூட்டுவிளையை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 30). இவர் மீது அருமனை போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடி-தடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ராஜகுமார் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி கலெக்டர் அரவிந்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். கலெக்டர் அரவிந்த் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ராஜகுமாரை அருமனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story