குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கடையம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
தென்காசி
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, அடிதடி போன்ற தொடர் குற்ற செயல்களில் கீழ ஆம்பூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரமாட்சி மகன் கருத்தப்பாண்டி என்ற கார்த்திக் (வயது 22) ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில், கருத்தப்பாண்டி என்ற கார்த்திக் மீது கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story