குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் ராசு என்ற செல்வராஜ் (வயது 34). இவர் கஞ்சா விற்பனை செய்ததாக ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் கைது செய்தார். ராசு மீது கஞ்சா வழக்கு, கொலை, கொலை முயற்சி, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story