குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
ஆனைமலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளியில் படித்து வரும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனைமலை பகுதியை சேர்ந்த முபாரக் (வயது 33) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஆண்டு இதுவரைக்கும் கோவை மாவட்டத்தில் 7 போக்சோ குற்றவாளிகள் உள்பட 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தெரிவித்தார்.