நெசவு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


நெசவு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
x

நெசவு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1.17 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள், பெண்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, தொழில்முனைவோர்களாக மாற்றுவது ஆகும். இதில் முதற்கட்டமாக 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரை உள்ள எழுத, படிக்க தெரிந்தவர்கள் மற்றும் கைத்தறியை இயக்க தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்.

இதற்கு என்ற இணையதளமுகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வருகிற 19-ந் தேதி ரெட்டிவலசை நினைத்ததை முடிப்பவன் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story