புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் வாலிபர்கள் மோதல்; சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்


புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் வாலிபர்கள் மோதல்; சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
x

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் திருச்சி பஸ்கள் நிறுத்துமிடம் அருகே வாலிபர்கள் இரு தரப்பினர் கட்டைகளால் தாக்கி மோதிக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த மோதலில் தொடர்புடைய 5 பேரை பிடித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாந்தநாதபுரத்தில் பிளக்ஸ் கடையில் பணியாற்றி வரும் அய்யப்பன் (வயது 19) என்பவர் புதிய பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை சற்று நகரும்படி கூறியிருக்கிறார். இதில் தகராறு ஏற்பட்டு 3 பேரும் சோ்ந்து அய்யப்பனை தாக்கியுள்ளனர். இதனால் அய்யப்பன் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார். இதில் இரு தரப்பினரும் நேற்று முன்தினம் மோதிக்கொண்டது தெரியவந்தது. இதில் அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் பெரம்பூரை சேர்ந்த வினோத்குமார் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story