வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

திருநெல்வேலி

ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் ராஜேஷ் சர்மா (வயது 23). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று ராஜேஷ் சர்மா அந்த ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ் சர்மா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story