சேலத்தில் பரிதாபம்: தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை

சேலத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரமங்கலம்:
தலை துண்டித்து...
சேலம் ஜங்ஷன்-செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை 25 வயதுடைய வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது வலது கையில் ஈஸ்வரி, டி.தனபால் என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணை
இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் கடந்த 3 நாட்களில் அடையாளம் தெரியாத 3 பேர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவங்கள் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






