போலீஸ் வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை
தக்கலை அருகே போலீஸ் வேலை கிடைக்காததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே போலீஸ் வேலை கிடைக்காததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் வேலை
தக்கலை அருகே உள்ள மருதூர் குறிச்சி, பூவன்விளையை சேர்ந்தவர் சாந்தி (வயது 55). இவருடைய கணவர் சுந்தர்ராஜ் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சதீஸ் (26), சந்தோ ஷ்(24) என 2 மகன்கள்.
இதில் சந்தோ ஷ் பிளஸ்-2 படித்து விட்டு போலீஸ் அல்லது ராணுவ வேலையில் சேர முயற்சி செய்து வந்தார். ராணுவத்துக்கு எங்கு ஆள் எடுத்தாலும் அதில் கலந்து கொள்வார். ஆனால் போலீஸ் மற்றும் ராணுவத்தில் வேலை கிடைக்கவில்லை.
தற்கொலை
இதனால் மனம் உடைந்த சந்தோஷ் சம்பவத்தன்று இரவு தென்னைக்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று விட்டு முளகுமூடு சாலையோரம் வாயில் நுரைதள்ளியபடி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108. ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.