தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மணல்மேடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை
மணல்மேடு;
மணல்மேடு அருகே புலவனூர் புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 32). சம்பவத்தன்று இவரது விட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து சத்தம் கேட்டது. உடனே மணிகண்டனின் மனைவி கார்த்திகா ஓடிச் சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு மரத்தில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஒரு கார் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story