தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

கரூரில் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

குடும்ப தகராறு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வீரகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 35). சமையல் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அமுதா. காளிமுத்து வேலை நிமித்தமாக கரூர் காந்திகிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். காளிமுத்துவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் அமுதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த காளிமுத்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் காளிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காளிமுத்துவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story