தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததால், தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததால், தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விவாகரத்து வழக்கு

பொள்ளாச்சி அருகே ஆனைமலையை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் மனோஜ் குமார்(வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா தேவி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் விவாகரத்து கேட்டு கல்பனா தேவி சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, உடுமலை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

தற்கொலை

இந்த நிலையில் வருகிற 10-ந் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மனோஜ்குமாருக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மனோஜ்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story