கடலூர் அருகேகடன் தொல்லையால் வாலிபர் தற்கொலைதிருமணமான ஒரு ஆண்டில் விபரீத முடிவு
கடலூர் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூர்
ரெட்டிச்சாவடி,
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி கிளிஞ்சிக் குப்பத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). இவரது மனைவி சரண்யா (30). திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆகிறது. 2 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் செல்வகுமார் சொந்த தொழில் செய்வதற்காக கடன் வாங்கி உள்ளார். இதனால் கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான ஒரு ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story