Normal
இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணி இடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், துணைத்தலைவர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் பாலன், துணை செயலாளர்கள் நவராஜ், மோசஸ், ஷிபானா, அகஸ்டின், மாவட்ட குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






