இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெகநாதன், நிர்வாகிகள் பியூலா, சகுந்தலா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் வக்கீல் காமராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியுடன் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக செல்ல வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டும். பணகுடி பகுதியில் அமைந்துள்ள காமராஜர், ராஜீவ்காந்தி, மூப்பனார் ஆகியோரின் சிலைகளை ராகுல்காந்தி திறந்து வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story