தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி டி.என்.புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மெடிக்கல் கடையில் கடந்த சில நாட்களுக்கு பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார். அதன் அருகில் உள்ள கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவரை வலைவீசி தேடினர்.

இந்த நிலையில் புளியங்குடி போலீசார் ரோந்து சென்றபோது, புளியங்குடி குளத்து பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் புளியங்குடி டி.என்.புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சூரியகாந்தி (வயது 24) என்பதும், அங்குள்ள மெடிக்கல், கோவிலில் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான சூரியகாந்தி மீது தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 35 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.



Next Story