வேன் மோதி வாலிபர் பலி
சாயல்குடி அருகே வேன் மோதி வாலிபர் பலியானார்.
சாயல்குடி,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா தமிழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராம்குமார் (வயது 25), துரைப்பாண்டி (28), தமிழரசன் (23), வீரலக்கண் (24). இவர்கள் 4 பேரும் கட்டிட ெதாழிலாளர்கள்.
இந்த நிலையில் தமிழ்பாடி கிராமத்தில் இருந்து சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரைக்கு செல்வதற்காக 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு கடலில் குளித்து விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ராமேசுவரம் பகுதியில் இருந்து நெல்லையை நோக்கி சென்ற வேன், ராம்குமார் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ராம்குமார், துரைப்பாண்டி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராம்குமார் இறந்தார். படுகாயம் அடைந்த துரைப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வேன் டிரைவர் சாகுல் ஹமீது (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.