வேன் மோதி வாலிபர் பலி


வேன் மோதி வாலிபர் பலி
x

தக்கலை அருகே வேன் மோதி வாலிபர் பலி

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே உள்ள ஆயிரம்பிலாவிளையை ேசர்ந்தவர் முருகன். இவரது மகன் சந்தோஷ் (வயது26). ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இவரும், இவரது நண்பர்கள் நாகராஜன் (26), ஜெகதீஸ் (26) ஆகியோரும் நேற்று முன்தினம் பருத்திக்காட்டு விளையில் நடந்த திருமணவிழாவுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சந்தோஷ் ஓட்டி செல்ல மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

பூச்சிக்காட்டுவிளையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே வந்த போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 ேபரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சந்தோஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

நண்பர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிக்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக வேன் டிரைவர் வட்டவிளையை சேர்ந்த வின்சென்ட்ராஜ் (39) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story