இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நடந்தது.
இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை
கள்ளக்குறிச்சி, செப்.29-
கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான் விக்டர் முன்னிலை வகித்தார். முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். ஒருங்கிணைப்பு அலுவலர் நெல்லை ஜெயந்தா தொடக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சேலம் கோபிநாத், வக்கீல் பால் சீனிவாசன், திருப்பூர் கிருஷ்ணன், திரைப்பட பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா, ஆசிரியர் ரம்யா அசோக், ஊடகவியலாளர் செண்பககாசி ஆகியோர் பேசினர். இதில் 5 கல்லூரி மாணவர்கள், உதவி பேராசிரியர்கள் பிந்து, பாண்டியன், நாகராஜன், பன்னீர்செல்வம், கோமதி, கார்த்திகேயன், ஜீவானந்தம், பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன், மாணவி சுபலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினா். முடிவில் தமிழ்த்துறை தலைவி பிரவீனா நன்றி கூறினார்.