கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் பங்களா தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 30). அதே பகுதியைச் சேர்ந்தவர் தணிகைவேல்.

இந்த நிலையில் கடந்த 13.10.2021 அன்று திருமலை சமுத்திரம் ஏரிக்கரையில் உள்ள எல்லையம்மன் கோவில் அருகில் யுவராஜிக்கும், தணிகைவேலுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.

இதில் யுவராஜின் தலையில் தணிகைவேல் கல்லை போட்டு கொலை செய்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இதில் அரசு தரப்பில் வக்கீல் ராஜமூர்த்தி ஆஜரானார்.

கூடுதல் அமர்வு நீதிபதி கே.விஜயா வழக்கை விசாரித்து தணிகைவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story