கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கத்தியால் குத்தி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 39). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (39). இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 11.7.2019 அன்று இரவு 7 மணி அளவில் ஆரணி பழைய பஸ் நிலையம் வழியாக யோகானந்தம் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பாண்டியன் முன்விரோதம் காரணமாக யோகானந்தத்தை கத்தியால் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மறுநாள் பாண்டியனை வி.ஏ.கே. நகர் பகுதி ஆற்றுப்பாலம் அருகே கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா தீர்ப்பு கூறினார்.

அதில் பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story