அரியலூர் அரசு ஆண்கள் பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா இன்று நடக்கிறது


அரியலூர்    அரசு ஆண்கள் பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா    இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அரசு ஆண்கள் பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா இன்று நடக்கிறது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள

தொழில்களை பற்றி அறிந்து கொள்ளவும், திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களை அறிந்திடும் வகையில்

இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சி அளிக்கும் அரசுத்துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஊராட்சி ஒன்றிய அளவில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படவுள்ளது.

அதன்படி, ரிஷிவந்தியம் தாலுகாவில் அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீன் தயாள் உபாத்யாய-கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின்கீழ் இளைஞர் திறன் திருவிழா இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில், 8-ம் வகுப்புக்கு மேல் கல்வி தகுதியுடைய 35 வயதுக்கு உட்பட்ட அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தங்களுக்கு விருப்பமுள்ள திறன் பயிற்சியை தேர்வு செய்து பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம்.

பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்க ஏற்பாடு செய்யும். மேலும் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவிம் வகையில் அரசு திட்டங்கள் பற்றிய விவரங்களை முகாமில் அறிந்து கொள்ளலாம்.

தகுதியான வேலைவாய்ப்பற்ற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கெர்ணடு பன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story