ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா


ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா
x

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளியில் நடந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா, தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆணைகள் வழங்கினார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் நாநிலதாசன், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story