தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

திருக்காட்டுப்பள்ளி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் திருச்சி அருகே உள்ள வடக்கு காட்டூர், பாத்திமாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகார்த்திக் (வயது27) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இரவு நேரங்களில் கடையிலேயே தங்கி கொள்வது வழக்கம். சம்பவத்தன்று கடையில் தங்கி இருந்த ஜெயகார்த்திக் இரவு கடையின் கூரையில் இருந்த இரும்பு கம்பியில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் கடைக்கு சென்று தூக்கில் தொங்கிய ஜெயகார்த்திக்உடலை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story