தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

மனைவி கோவிலுக்கு வர மறுத்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அகரப்பேட்டைகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது27). இவருக்கு திருமணம் ஆகி 9மாதம் ஆகிறது. இவரது மனைவிக்கு வளைகாப்பு விழா நடைபெற்று தாய் வீடான அருகில் உள்ள செய்யாமங்கலத்திற்கு சென்றுள்ளார். இதனால் இவர் செய்யாமங்கலத்துக்கு சென்று மனைவியை கோவிலுக்கு செல்லாலம் என அழைத்துள்ளார். மனைவி கோவிலுக்கு வர முடியாது என்று கூறியதால் மீண்டும் தனது வீட்டிற்கு வந்த மோகன்ராஜ் வீட்டுக்குள் சென்று சேலையில் தூக்குப்போட்டு கொண்டாா். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மோகன்ராஜ் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


Next Story