விஷம் தின்று வாலிபர் தற்கொலை


விஷம் தின்று வாலிபர் தற்கொலை
x

மோட்டார் சைக்கிளுக்கு தவணை கட்ட முடியாததால் விஷம் தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசம் அருகே சோலை பூஞ்சேரி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் கலையரசன் (வயது23). இவர் தவணை முறையில் கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார்.கலையரசன் மாதந்தோறும் பணத்தை கட்ட இயலாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வயலுக்கு வைத்திருந்த குருணை மருந்தினை(விஷம்) கலையரசன் தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவா், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசன் உயிரிழந்தார். இது குறித்து அவர் தந்தை மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story