அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலம்
அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலம் நடந்தது.
அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலம் நடந்தது.
பள்ளிக்கல்வி துறை சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி திருவண்ணாமலையில் இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலம் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பு இந்த ஊர்வலத்தை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிதாஸ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சென்றனர். ஊர்வலம் பெரியார் சிலை, அண்ணாசிலை, காந்திசிலை வழியாக திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ஜோசப்பெடரிக் மற்றும் ஆசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இளைஞர் எழுச்சி நாள் உறுதி மொழியேற்கப்பட்டது.