வாலிபர் மீது தாக்குல்


வாலிபர் மீது தாக்குல்
x

திருக்காட்டுப்பள்ளி அருகே வாலிபர் மீது தாக்குல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது30). இவருடைய மனைவியின் சகோதரி கோகிலாவும் அதே தெருவை சேர்ந்த குட்டீஸ் ராஜா என்பவரும் பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் குட்டீஸ் ராஜா , கோகிலாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் குமார் ஊர்பெரியவர்கள் மீது பேசி குட்டீஸ்ராஜாவுக்கும் கோகிலாவுக்கும் திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த குட்டீஸ் ராஜாவின் தந்தை பழனிராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் குமரேசன், லோகநாதன் மற்றும் 16வயது சிறுவன் ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜேஷ்குமார் மற்றும் அவரது தாயார் வளர்மதி ஆகியோரை திட்டி கம்பியால் தாக்கியதாக கூறப்டுகிறது. தாக்குதலில் காயமடைந்த ராஜேஷ் குமார் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்று தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் ராஜேஷ்குமார் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


1 More update

Next Story