வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

தஞ்சையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த ஏழுப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் விக்னேஷ் (வயது 20). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே விக்னேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் விக்னேசிடம் தகராறில் ஈடுப்பட்டதோடு அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விக்னேசின் சகோதரர் வினோத் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story