மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது


மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
x

வாலாஜா அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவிற்கு உட்பட்ட புளியந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). இவருக்கும் பெல் பகுதியில் பிளஸ்-2 படித்து வரும் ஒரு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி லாலாப்பேட்டையில் உள்ள காஞ்சனகிரி மலைபகுதிக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

இந்த நிலையில் மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மாணவி கர்ப்பமாக இருப்பதாகடாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர்.


Next Story