மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசூரை சேர்ந்த கூலி தொழிலாளி தாமோதரன் (வயது 27). இவர், 10-ம் வகுப்பு மாணவிக்கு உறவினர் ஆவார்.
இதனால் அவர், அடிக்கடி மாணவியுடன் பேசி உள்ளார். உறவினர் என்பதால் அந்த மாணவியும் பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட் டது. இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள் அந்த மாணவியை அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த போது மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்த தகவலை டாக்டர்கள் தெரிவித்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி மாணவியிடம் விசாரித்த போது, மாணவியின் கர்ப்பத்துக்கு தாமோதரன் தான் காரணம் என்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.