சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
x

ஆலங்காயத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் படையப்பா என்கிற நேரு (வயது 23), கூலி வேலை செய்து வருகிறார்.

இவரும் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து 2 வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர் வேலன்நகர் பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்த நேரு மற்றும் சிறுமியை ஆலங்காயம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், நேருவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story