மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி


மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி
x
தினத்தந்தி 27 Feb 2023 6:45 PM GMT (Updated: 27 Feb 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறையில் முதல் முறையாக மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் முதல் முறையாக மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

குத்துச்சண்டை போட்டி

மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும் தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகத்துடன் இணைந்து தஞ்சை மண்டல அளவிலான குத்துச் சண்டை போட்டி மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியை மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். போட்டியில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 250 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

முதல் முறை

14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் 19 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. மூன்று சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டியில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 250 போட்டியாளர்கள் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மயிலா டுதுறை மாவட்டத்தில் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.


Next Story