மண்டல அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டி
உளுந்தூர்பேட்டையில் மண்டல அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டி
உளுந்தூர்பேட்டை
நாகப்பட்டினம், புதுச்சேரி மண்டலத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் கலந்து கொண்ட 2023-ம் ஆண்டுக்கான கோ-கோ விளையாட்டு போட்டிகள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஐவதுகுடி ஸ்ரீ அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் ஏராளமான பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் புதுச்சேரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல் பரிசையும், உளுந்தூர்பேட்டை அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரி 2-வது பரிசையும், ஶ்ரீ அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரி 3-வது பரிசையும் தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஶ்ரீ அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் புனிதவதி மோகன் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதில் அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கமால் பாஷா, உடற்கல்வி இயக்குனர் பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.