திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு


திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 1 March 2021 7:24 PM IST (Updated: 2 March 2021 6:57 AM IST)
t-max-icont-min-icon

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

சென்னை,

திமுக கட்சி கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதுது. டி.ஆர். பாலு தலைமையிலான குழு நேற்று முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் திமுக உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மனிதநேய மக்கள் கட்சி 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 தொகுதிகளை கேட்டோம் சூழ்நிலையை கருதி 3 தொகுதிகளுக்கு சம்மதித்தோம். ஐ.யூ.எம்.எல். ஏணி சின்னத்தில் தான் 
போட்டியிடுகிறோம். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.


Next Story