அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி: தே.மு.தி.க. தனித்து போட்டியா? சுதீசின் ‘பேஸ்புக்' பதிவால் பரபரப்பு


அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி: தே.மு.தி.க. தனித்து போட்டியா? சுதீசின் ‘பேஸ்புக் பதிவால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2021 1:07 AM IST (Updated: 2 March 2021 6:56 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையேயான தொகுதி உடன்பாடு முடிவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையேயான தொகுதி உடன்பாடு முடிவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு வழங்கியதை விட கூடுதலான இடங்கள் வேண்டும் என தே.மு.தி.க. கோரிக்கை விடுப்பதால், அ.தி.மு.க. தரப்பு யோசித்து வருகிறது.

இதற்கிடையில் அ.தி.மு.க. தரப்பில் தே.மு.தி.க.வுக்கு நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் தே.மு.தி.க. அதை மறுத்துவிட்டது. இதனால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதேவேளை தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது ‘பேஸ்புக்' பக்கத்தில் நேற்று இரவு ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ‘நமது முதல்வர்' என்ற வார்த்தைக்கு அருகே விஜயகாந்த் படமும், ‘நமது கொடி' என்ற வார்த்தைக்கு அருகே தே.மு.திக. கட்சி கொடியின் படமும், ‘நமது சின்னம்' என்ற வார்த்தைக்கு அருகே முரசு சின்னமும் இருந்தது. 

அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் எல்.கே.சுதீசின் ‘பேஸ்புக்' பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி என்பதை சொல்லாமல் சொல்லும் பதிவு தான் இது', என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story