தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் இன்று தொடங்குகிறது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில், வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதில், கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விருப்பமனு அளித்தனர். மொத்தம் 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 7 ஆயிரத்து 967 மனுக்கள் தாக்கல் ஆகி உள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் இன்று தொடங்குகிறது. இந்த நேர்காணலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் நடத்த உள்ளனர்.
Related Tags :
Next Story