தேர்தல் விதியை மீறி ஊர்வலம் சென்ற தே.மு.தி.க.வினர் 63 பேர் மீது வழக்கு
தேர்தல் விதியை மீறி ஊர்வலம் சென்ற தே.மு.தி.க.வினர் 63 பேர் மீது வழக்கு.
வேலூர்,
வேலூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீசுக்கு வரவேற்பு அளித்த தே.மு.தி.க.வினர் மோட்டார் சைக்கிள், கார்களில் ஊர்வலமாக சென்றனர். இதைக்கண்ட வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் தே.மு.தி.க.வினர் ஊர்வலம் செல்ல அனுமதி வாங்கி உள்ளார்களா என்று விசாரித்தார். அப்போது தே.மு.தி.க.வினர் அனுமதி பெறாமல் தேர்தல் விதியை மீறி ஊர்வலம் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தே.மு.தி.க. வேலூர் மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்பட 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story