தொடர் இழுபறி: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நாளை காங்கிரசுக்கு திமுக அழைப்பு


தொடர் இழுபறி: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நாளை காங்கிரசுக்கு திமுக அழைப்பு
x
தினத்தந்தி 4 March 2021 5:18 PM IST (Updated: 4 March 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த காங்கிரசுக்கு திமுக நாளை அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி அதிமுகவில் பாமகவுடன் மட்டும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியுடனும் மனித நேய மக்கள் கட்சியுடனும் விசிகவுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. 

இந்தநிலையில், திமுக காங்கிரஸ் கட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகள் கேட்டு வருவதாகவும் திமுக 18 லிருந்து 22 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நாளை காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Next Story