மார்ச் 6ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், திமுகவுடன் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்பட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் மாநில செயற்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story