தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10 ஆம் தேதி வெளியீடு
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
காணொலி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் கடந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story