அதிமுக கூட்டணியில் தற்போது வரை நீடிக்கிறோம் - தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி


அதிமுக கூட்டணியில் தற்போது வரை நீடிக்கிறோம் - தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி
x
தினத்தந்தி 5 March 2021 5:20 PM IST (Updated: 5 March 2021 5:20 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக கூட்டணியில் தற்போது வரை நீடிக்கிறோம் என்று தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி வெளியிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கி இருக்கின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே நேற்று முன்தினம் நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இறுதியாவதில் இழுபறியே நீடித்து வருகிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தற்போது வரை நீடிக்கிறோம் என்று தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து 2 நாட்களில் இறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story